பணி வழங்கும் நிறுவனம்: வருமானவரித்துறை
காலி இடங்கள்: 56 (விளையாட்டு வீரர்களுக்கு மட்டும்)
பதவி: ஸ்டெனோகிராபர் கிரேடு II, வருமானவரி உதவியாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (எம்.டி.எஸ்).
விளையாட்டு தகுதி: தடகளம், பேட்மிண்டன், கேரம், சதுரங்கம், கிரிக்கெட், கால்பந்து, ஆக்கி, கபடி, ஸ்குவாஷ், நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கைப்பந்து உள்பட பல்வேறு போட்டிகளில் மாநில, தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள்
கல்வி தகுதி: ஸ்டெனோகிராபர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருமானவரி உதவியாளர் பணிக்கு பட்டப்படிப்பும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் அடைந்திருக்க வேண்டும்.
வயது: ஸ்டெனோகிராபர், வருமானவரி உதவியாளர் பணிக்கு 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் பணிக்கு 18 முதல் 25 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 5 முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்டிங், திறனறி தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-4-2025
இணையதள முகவரி: https://www.incometaxhyderabad.gov.in/index.php
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||