தமிழகத்தில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள்கள் மட்டுமே அவகாசம் உள் ளது. துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் என குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு அறிவிக்கை ஜூன் 20- இல் வெளியிடப்பட்டது. விண்ணப்பங்களை இணைய வழி (www.tnpsc.gov.in) சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 19 ஆகும். அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க இன் னும் 10 நாள்களே அவகாசம் உள்ளது.
தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒரு முறைப் பதிவுதளத்தில் பதிவு செய்த பிறகு, தேர்வுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். தேர்வர்கள் ஏற்கெனவே ஒருமுறைப் பதிவில் பதிவு செய்திருந்தால், அவர்கள் தேர்வுக்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாகப் பூர்த்தி செய்யத் தொடங்கலாம். தேர் வுக்கு விண்ணப்பிக்கும் தேர் வர்கள், அதற்கான அனைத் துத் தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததை உறுதி செய்ய வேண்டும். தேர்வரால் அளிக்கப்பட்ட விவரங்கள் தவறு என்றாலோ, தேர்வாணைய அறிவுரைகள் அல்லது விதிகள் மீறப்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டாலோ, எந்த நிலையிலும் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை தேர்வாணையத்துக்கு உண்டு என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத்தேர்வு செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பங்களைத் திருத்துவதற்கான அவகாசம் ஜூலை 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை என்று தேர்வாணை யம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||