'தேசிய கல் விக் கொள்கையின் அடிப்படை யில் ஆறாம் வகுப்புக்கான புதிய பாட புத்தகங்கள் தயாரிப்பு பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள் ளது. இந்த புத்தகங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்' என்று மத் திய கல்வி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பாடப் புத்தகங்கள் தயார் நிலை குறித்து தில்லியில் வியாழக்கி ழமை நடைபெற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன் சில் (என்சிஇஆர்டி) அதிகாரிகளுடனான கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆய்வு செய்த நிலையில், இத் தக வலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ (மத்திய இடைநி லைக் கல்வி வாரியம்) உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய, மாநில கல்வி வாரியங்கள் என்சிஇஆர்டி பாடத் திட்டத் தைப் பின்பற்றி வருகின்றன. இந்த நிலையில், 3 மற்றும் 6-ஆம் வகுப் புகளுக்கு 2024-25 கல்வியாண்டு முதல் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று என்சிஇஆர்டி அறிவித்தது. அதன் படி, கடந்த ஏப்ரல் மாதமே புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, சந்தைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பள்ளிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலை யில், 3-ஆம் வகுப்பு பாடப் புத்த கங்கள் மட்டுமே முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தன. ஆனால், 6-ஆம் வகுப்புக்கான சமூக அறிவி யல் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பிற பாடப் புத்தகங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இத னால், பள்ளிகள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது.
இந்த தாமதத்தைத் தொடர்ந்து, என்சிஇஆர்டி அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் வியாழக்கிழமை ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள், 3 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கான 9 பாடப் புத்தகங்கள் ஏற்கெனவே பயன் பாட்டுக்கு வந்துவிட்டன. எஞ்சிய 8 பாடப் புத்தகங்கள் தயாரிப்புப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் உயர் தரத்தில் பாடபுத் தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒன்று முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களையும் என்சி இஆர்டி தயாரித்து வருகிறது' என்றனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||