இளநிலை நீட் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மே மாதம் நடந்த இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீட் தேர்வு மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும், முதுகலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. நெட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த குளறுபடிகளை தொடர்ந்து இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை சீரமைக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து உள்ளது.
இந்நாள் வரை ஓஎம்ஆர் ஷீட் மற்றும் போனா பயன்படுத்தி நடத்தப்பட்டு வந்த இளநிலை நீட் தேர்வுகளை ஆன்லைன் முறைக்கு மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அடுத்தாண்டு முதல் இந்த தேர்வு ஆன்லைன் முறையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||