பள்ளிக் கல்வித் துறையில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,058 தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 25.50 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.
இவர்களுக்கு பாடம் நடத்த 1.07 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு விதிக ளில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை கடந்த டிசம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. அதன்படி மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் இனி நேரடியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக மட்டுமே பதவி உயர்வு பெற முடியும். பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதற்கு இடைநிலை ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தா லும் தமிழக அரசு அறிவிப்பை திரும்பப் பெறவில்லை.
இந்த நிலையில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலி யாக உள்ள 3,058 தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தொடக்கப் பள்ளி தலை மையாசிரியர் 1,983 பணியிடங்களும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் 1,075 பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த 3,058 பணி யிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.இதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஒன்றிய அளவில்தான் நடத்தப்படும். மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான நபர்கள் இல்லாத போது அந்த இடத்துக்கு இடை நிலை ஆசிரியர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||