தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றியவர் திராவிடச்செல்வம்(60). இவர், நேற்று பணி ஓய்வுபெற இருந்த நிலையில், இவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்த திராவிடச் செல்வம், தற்போது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர்,4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இந்த புகார் நிலுவையில் உள்ள நிலையில், திராவிடச்செல்வம் நேற்று பணி ஓய்வுபெற இருந்தார். ஆனால், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர், திராவிடச்செல்வத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து, அதற்கான அரசாணை தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||