பத்தாம் வகுப்பு ஜூலை 2024 துணைத் தேர்வுகளுக்கு தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் :
- நடைபெறவிருக்கும் ஜூலை 2024, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுத ஆன்-லைன் வழியாக விண்ணப்பித்திட 16.05.2024 முதல் 01.06.2024 வரையிலான நாட்களில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு (Service centers) நேரில் சென்று விண்ணப்பிக்கவேண்டும் எனவும், மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள். சிறப்பு அனுமதித் திட்டத்தில் 03.06.2024 முதல் 04.06.2024 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவும் தனித்தேர்வர்களுக்கு
தனித்தேர்வர்கள் விண்ணப்பித்திட சேவை மையங்களுக்கு வருகைபுரிவார்கள்.அவ்வாறு 16.05.2024 முதல் வருகைபுரிவோரின் விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்திட தங்களது ஆளுகைக்குட்பட்ட சேவை மையங்களின் தலைமையாசிரியர்களுக்கு கீழ்கண்டவாறு தெரிவித்து, பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க (Service Centers) அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். - 16.05.2024 முதல் தேர்வர்கள் சேவை மையங்களுக்கு வருகைபுரிவார்கள். அவ்வாறு வருகைபுரிவோரிடம் உரிய ஆவணங்களைப் பெற்று சேவை மையங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ கொண்டு ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, Click here to access SSLC Examination என்ற வாசகத்தினை click செய்த பின்னர் திரையில் தோன்றும் SSLC PRIVATE APPLICATION என்ற தலைப்பின் கீழ் இடம் பெற்றிருக்கும் சேவை மையங்கள் எவ்வாறு விண்ணப்பங்களைப் பெற வேண்டுமென்பதற்கான அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள், தேர்வுக்கால அட்டவணைகள் ஆகியவற்றை அதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து சேவை மையங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டவேண்டும்.
- சேவை மையங்களுக்கான அறிவுரைகளைப் பின்பற்றி, தனித்தேர்வர்களது விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- தேர்வர்களின் விண்ணப்பங்ளை பெற்று பதிவேற்றம் (Uploading) செய்த பின்னர், Report Section-ஐ Click செய்து தேர்வர் வகை வாரியான விவரங்களையும், கட்டணம் தொடர்பான விவரங்களை 06.06.2024 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் (Downloading) செய்ய வேண்டும்.
- குறிப்பு:
- சிறப்பு அனுமதிக் கட்டணம் - 5.500/- (2023- 2024-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி களில் பயின்று தேர்ச்சிப்பெறாத மாணவர்களுக்கு இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது. (அரசாணை (நிலை)எண்.63.பள்ளிக் கல்வித்(அ.தே)துறை :04.03.2024)
- பின்னர் அதனடிப்படையில் தனித்தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையினை (i) பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு விண்ணப்பங்களுக்கான கட்டணம் (SSLC supplementary Exam Application Amount), (தக்கல் கட்டணம் உட்பட) (ii) பத்தாம் வகுப்பு தேர்விற்கான ஆன்-லைன் கட்டணமாக தொகை (SSLC On-line Fees) 2 வகைக்களாக தனித்தனியாக பிரித்து, அதனை www.karuvoolam.tn.gov.in இணையதளத்திற்கு சென்று இணைப்பில் காணும் வழிமுறைகளை பின்பற்றி தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் கட்டணத்தினை செலுத்திட வேண்டும். அரசாணை(2டி) எண்.42, பள்ளிக் கல்வி (அ.தே)த் துறை, நாள்.11.04.2023-ன்படி, சேவை மையங்களுகான சேவை கட்டணம் ரூ.70/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- மையங்களுக்கான சேவைக்கட்டணங்கள் இதில் ரூ.35/-ஐ சேவை மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக வைத்துக் கொண்டு, மீதமுள்ள ரூ.35/- ஐ அரசு கணக்குத் தலைப்பில் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்கண்டவாறு தேர்வர்களின் தேர்வுக் கட்டண தொகை மற்றும் ஆன்- லைன் கட்டணத்தொகையினை செலுத்திய பிறகு பெறப்படும் Payment Receipt மற்றும் தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களின் விண்ணப்பங்கள் (உரிய இணைப்புகளுடன்) ஆகியவற்றினை மேற்காண் தேதிகளில் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும். - மேலும், சேவை மையங்களிலிருந்து பெறப்படும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு கட்டணம் செலுத்தப்பட்ட செலுத்துச் சீட்டு ஆகியவற்றை இணைத்து இணை இயக்குநர் (பணியாளர்) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு தபால் மூலம் 10.06.2024-க்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- மேலும், ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வது தொடர்பான சேவை மையங்களுக்கான அறிவுரைகள் பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் இக்கடிதத்துடன் இணைத்தனுப்பப்படுகின்றன. சேவை மையங்களுக்கான அறிவுரைகளைப் பின்பற்றியே தேர்வர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை ஆன்- லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வது தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் சேவை மையங்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கான விண்ணப்பித்தல் தொடர்பாக அறிவுரைகள்:
- ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கு 16.05.2024 முதல் 24.05.2024 நாட்களில் அறிவியல் செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ய வரும் தனித்தேர்வர்களில் கருத்தியல் பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சிப் பெற்று அறிவியல் செய்முறைத் தேர்வை மட்டும் எழுதவுள்ள தனித்தேர்வர்களும், (தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெற்றிட) கருத்தியல் தேர்விற்கு சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் நாட்களில் (16.05.2024 முதல் 01.06.2024 வரை) செய்முறைத் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்த ஒப்புகைச்சீட்டை காண்பித்து அறிவியல் தேர்விற்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||