ஜூலை 2024 துணைத் தேர்வுகளுக்கு தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் :
- நடைபெறவுள்ள ஜூலை 2024 மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) துணைத் தேர்விற்கு, விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும், மார்ச் 2024 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :
- மார்ச் 2024, மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத/வருகை புரியாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளியில் 16.05.2024 ( வியாழக்கிழமை) காலை 11.00 மணி முதல் 01.06.2024 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
- ஜூலை 2024, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மார்ச் 2024 மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தனித்தேர்வர்களும் 16.05.2024 (வியாழக்கிழமை) காலை 11.00 மணி முதல் 01.06.2024 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service centres) .
- விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service centres) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையத்தில் / பள்ளியில் பணமாகச் செலுத்த வேண்டும்.
சிறப்பு அனுமதித் திட்டம்
- 16.05.2024 (வியாழக்கிழமை) முதல் 01.06.2024 ( சனிக்கிழமை) வரையிலான நாட்களில் ஜூலை 2024 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 04.06.2024 03.06.2024 (திங்கள்கிழமை) மற்றும் (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு சிறப்பு அனுமதிக்கட்டணம் - ரூ.1000/- (2023-2024-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சிப்பெறாத / வருகைப்புரியாத மாணவர்களுக்கு இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது)
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம் :-
- ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
- மேலும், இத்தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
- FOLLOW KALVISOLAI WHATS APP CHANNEL | CLICK HERE
NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||