அரசுப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களின் திறனை அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழ் நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை 'மாநில மதிப்பீட்டு புலம்' என்ற திட் டத்தை கொண்டு வந்தது. அதன்படி, 6முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களின் திறன் சார்ந்தமதிப்பீட்டை அறிந்து கொள்ள வினாடி-வினா போட்டியை நடத்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்து உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந் துள்ள அனைத்து அரசுப்பள்ளிகளி லும் இந்த கணினி வழியிலான வினாடி-வினா போட்டியை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக் கிறது. வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) முதல் வருகிற 29-ந்தேதி வரை ஒவ் வொரு வகுப்பு மாணவ-மாணவிக ளுக்கும் நடத்தப்பட வேண்டும் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிமுறைகளையும் பள் ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக் கிறது. அந்தவகையில், வினாத்தாளை உருவாக்கும் நிகழ்வு வினாடி-வினா மதிப்பீடு நடைபெறுவதற்கு 2 நாட்க ளுக்கு முன்னதாகவே முடிக்கப்பட வேண்டும் என்றும், அந்தந்த வகுப்பா சிரியர் மட்டுமேவினாத்தாள் உருவாக் கும் நிகழ்வை மேற்கொள்ளவேண்டும் என்றும், வினாடி-வினா மதிப்பீடு முடிந்தபிறகு விடைத்தாளைபதிவிறக் கம் செய்து வகுப்பில் மாணவர்களு டன் விவாதிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||