இள நிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வில் (நீட்) தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர், 720-க்கு 720 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த கௌஸ்தவ் பௌரி என்ற மாணவர் மூன்றாவது இடத்தையும், சூர்யா சித்தார்த் என்ற மாணவர் 6-ஆவது இடத்தையும், வருண் என்ற மாணவர் 9-ஆவது இடத்தையும் தேசிய அளவில் பிடித்துள்ளனர்.
வரலாற்று சாதனை : நீட் தேர்வு வரலாற்றிலேயே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இத்தகைய சிறப்பிடங்களைப் பெறுவது இதுவே முதன் முறை. அதிலும், முதல் பத்து இடங் களில் நான்கு தமிழக மாணவர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக் கது. மேலும், இதுவரை இல்லாத வகை யில் நீட்தேர்வு எழுதிய 1.44 லட்சம் தமிழக மாணவர்களில், 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகம்; எனினும், தேசிய அளவில் நிகழாண்டில் முதல் 50 இடங்களில் தமிழகத் தைச் சேர்ந்த எந்த மாணவியும் இடம் பெறவில்லை. நீட் நிகழாண்டுக்கான தேர்வு நாடு முழுவதும் 490 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் கடந்த மே 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 20.38 லட்சம்பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப் பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.44 லட்சத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி,ஒடியா,அஸ்ஸாமி,வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளில் தேர்வு நடைபெற்றது. மணிப்பூரில் மட்டும் கலவரம் காரணமாக வேறு தேதியில் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் https://www.nta.ac.in என்ற இணையப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியானது. இணையதளம் முடக்கம்: இதனிடையே, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானமாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ள முற்பட்டதால் தேசிய தேர்வு முகமை இணையதளப் பக்கம் பலமணி நேரங்களுக்கு முடங்கியது. இதனால் பல மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய இயலாமல் அவதிப்பட்டனர். தேசிய அளவில் தமிழக மாணவர்களின் சாதனை
- பிரபஞ்சன் 720
- கௌஸ்தவ் பௌரி 716
- சூர்யா சித்தார்த் 715
- வருண் 715
- சாமுவேல் ஹர்ஷித் சாபா 711
- ஜேக்கப் பிவின் 710
தமிழகத்துக்கு அணி சேர்த்த அரசு ஆசிரியர்களின் மகன்! தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழக மாணவர் பிரபஞ்சனின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள மேல் மலையனூர் ஆகும். அவரது பெற் றோர் ஜெகதீஷ் மற்றும் மாலா இருவரும் விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள். சென்னையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் பிளஸ்-2 படித்த பிரபஞ்சன், அங்கேயே நீட் பயிற்சி பெற்றார். 'நீட் தேர்வில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி; இப்போது எனது குடும் பத்தில் முதல் தலைமுறை மருத்துவராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது' என்றார் மாணவர் பிரபஞ்சன்.
- NEET UG 2023 DOWNLOAD
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEET RESULT 2023 ? | CLICK HERE
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||