உதகை சாம்ராஜ் பள் ளியில் பிளஸ் 2 தேர்வில் கணக்கு பாடம் எழுதிய 34 மாணவ, மாண வியரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,செவ் வாய்க்கிழமை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அவர்களில் 31 பேர் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வை யொட்டி உதகை அருகே சாம்ராஜ் எஸ்டேட் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மையத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4இல் கணிதத் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே தேர்வுப் பணி யில் ஈடுபட்டிருந்த முதன்மை கண் காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துறை அலுவலர் செந்தில், அலுவ லர் சீனிவாசன், அறை கண்காணிப் பாளர்கள் ராம்கி, மூர்த்தி ஆகிய 5 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உத செய்யப் வியதாக பணியிடை நீக்கம் பட்டனர்.இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்களது குழந் தைகளின் தேர்வு முடிவுகளை உட னடியாக அறிவிக்க வலியுறுத்தி மாணவ, மாணவியரின் பெற்றோர் கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் காத்திருப்பு போராட்டத் தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி, பெற்றோர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி இப் பிரச்னை தொடர்பாக அரசின் கவ னத்துக்கு எடுத்துசெல்வதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்த 34 மாணவ, மாணவி யரின் கணித தேர்வு முடிவுகளை கல்வி இயக்குநரகம் செவ்வாய்க் கிழமை வெளியிட்டது. இதில் 31 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற் றதாகவும், ஒரு மாணவர் தோல்வி அடைந்துள்ளதாகவும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 2 மாணவர்களின் முடி வுகள் மட்டும் நிறுத்திவைக்கப்பட் டுள்ளதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||