- கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்.
- இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட இடஒதுக்கீட்டின்கீழ் (RTE) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
- ஒவ்வொரு ஆண்டும் எல்கேஜி முதல் 1 ஆம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கைகள் நடைபெற்று வருகிறது. அதற்கான கட்டணத்தை அந்த அந்த பள்ளிகளுக்கு அரசே செலுத்தி வருகிறது.
- இந்நிலையில், 2023- 24 ஆம் ஆண்டுக்கான ஆண்டிற்கான 25 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வரும் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- 2023-24 ஆம் ஆண்டிற்கான 25 சதவீத இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
- அதில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கவில்லை.
- இந்நிலையில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை தயாராகி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு விடுவிக்க வேண்டும்.
- அப்படி இல்லையென்றால், 25 சதவீத இலவச சேர்க்கையை தனியார் பள்ளிகளில் தொடர்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய நிலை வரும் என்று தெரிவித்துள்ளார்.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2022-2023 | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||