- அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே தேர்வு கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக குழு அமைத்து முடிவு செய் யப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
- ஓரிரு மாதங்களில்.... சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து பல்கலைக் கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.
- அந்த கூட்டத்திற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன் முடி தலைமை தாங்கி னார். கூட்டத்திற்கு பின்பு அவர் பத்திரிகை யாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :- ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஊதியம், நிர்வாகம் போன்றவற்றில் வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுவதை மாற்றி அமைத்து, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நியமனம், தேர்வு கட்டணம் என அனைத்து விவகாரங்களிலும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
- பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், எழுத்தர்கள், பதிவாளர்கள், ஆசிரியரல்லாத பணியாளர் என அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் அளிப்பது பற்றியும், மாணவர் களுக்கு ஒரே மாதிரியான தேர்வு கட்டணத்தை நிர்ண யிப்பது பற்றியும், ஒரே மாதிரி யான நிர்வாகத்தை உருவாக்கு வது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
- இதனால் பல்கலைக்கழகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் நீங்கும்.அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட உள்ளது. அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று ஓரிரு மாதங்களுக்கு உள்ளாக அது பற்றி அறிவிக்கப்படும். போலி பட்டங்கள் போலி பட்டங்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் வந்தன. இனி எந்த பல்கலைக்கழகத்திலும், தனியார் அளவிலோ அல்லது பல்கலைக்கழகஅளவிலோ கூட்டங்கள் நடத்தப்பட்டால், அது உயர் கல்வித்துறை செயலாளரின் அனுமதியின் பேரில் நடத்தப்பட வேண்டும்.
- அந்த கூட்டத்திற்கு வேறு யாரையும் அழைக்க வேண்டும் என்றாலும் அவரது ஒப்புதல் பெறபட வேண்டும் என்பதையும் இந்த கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2022-2023 | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||