- தஞ்சாவூர், மார்ச் 18: அரசு பொதுத் தேர்வு எழுதுவ தற்கு 75 சதவீத வருகைப் பதிவு அவசியம் இருக்க வேண்டும் என்றார் பள் ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது: ஆண்டுக்கு 3 நாள்கள் வந்தால், பிளஸ் 2 தேர்வு எழதலாம் எனக் கூறியதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இப்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுகிற மாணவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் வந்தவர்கள். கரோனா காலத்தில் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை இருந்ததால், கடந்த கால ஆட்சியில் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் கடந்த இரு ஆண்டுகளில் வாழ்வாதார ரீதியாகவும், மனதளவிலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதுபோன்ற மாணவர்களிடையே மனரீதியான அச்ச உணர்வு இருக்கலாம் என்ற அடிப்படையில், அவர்களுக்காக சிறப்பு நட வடிக்கையாக யாரெல்லாம் பிளஸ் 2 தேர்வு எழுத ஆசைப்படு கின்றனரோ, அனைவரும் வருமாறும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்படும் எனவும் கூறினோம். இந்த நடைமுறை அனைத்து ஆண்டுகளுக் கும் கிடையாது. வரும் கல் வியாண்டுமுதல் ஏற்கெ னவே உள்ள விதிமுறைப்படி 75 சத வீத வருகைப் பதிவு இருந்தால்தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத பயப்படக்கூடாது. தன்னம்பிக்கையுடன் தேர்வு எழு துமாறு தமிழக முதல்வரே அறிவு றுத்தியுள்ளார். எனவே, மாணவர் கள் பயமின்றி தேர்வு எழுத வேண் டும். பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களின் பெற்றோர்களை அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் உடனுக்குடன் தொடர்பு கொண்டு, தேர்வு எழுத வராத காரணத்தைக் கேட்டறிந்து வருகின்றனர். இனி வரக்கூடிய தேர்வை எழுதுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார் அமைச்சர்.
- NEED MORE ? | CLICK HERE
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2022-2023 | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||