வங்கி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகளை நடத்தும் ஐ.பி.பி.எஸ். அமைப்பு மூலம் தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.) அதிகாரி, வேளாண்துறை அதிகாரி, சட்ட அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி உள்பட பல்வேறு பிரிவுகளில் 710 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணிகளுக்கு ஏற்ப என்ஜினீயரிங், பட்டப்படிப்பு, சட்டப் படிப்பு, முதுகலைப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
21-11-2022 அன்றைய தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
முதன் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதன் நிலைத்தேர்வு சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும், மெயின் தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-11-2022.
முதன் நிலைத்தேர்வு 24-12-2022, 31-12-2022 ஆகிய தேதிகளிலும், மெயின் தேர்வு 29-1-2023 அன்றும் நடைபெறும்.
விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை https://www.ibps.in/crp-specialist-officers-xi-2/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||