தீபாவளி பண்டிகை கடந்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.
அதனை ஏற்று, தமிழக அரசு, பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் 25.10.22 அன்று விடுமுறை விடப்படுகிறது என்றும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19-ந்தேதியன்று (நாளை) பணி நாளாக அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்தது.
ஏற்கனவே அரசு அறிவித்தபடி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||