பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ‘டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு கல்லூரிகளுக்கு 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், அதில் 50 சதவீதம் தங்களுக்கு ஒதுக்கவேண்டும் அல்லது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தி தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களின் உழைப்பும், சேவையும் மதிக்கப்பட வேண்டும். உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்துக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதனால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு போதிய அளவில் பயன் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் தகுதி மற்றும் திறமையில் எந்த சமரசமும் செய்து கொள்ளத் தேவையில்லை. கவுரவ விரிவுரையாளர்களில் யு.ஜி.சி. நிர்ணயித்த கல்வித்தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் சிறப்பு போட்டித்தேர்வு மூலம் பணிநிரந்தரம் செய்ய அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||