தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் வரும் 58 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் 1,311 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,024 பட்டதாரிகள் விரிவுரையாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த விரிவுரையாளர்களை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் பணி நீக்கி உத்தரவிட்டது.
இதையடுத்து இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்தோம். எங்களை திடீரென்று பணி நீக்கம் செய்தது சரியல்ல. எங்களுக்கு அரசு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள் |
TNPSC TRB LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||