கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு பயிற்சி உயர் தொழில்நுட்பம் (ஹை-டெக்) ஆய்வகம் மூலம் தொடர்ந்து வழங்கப்படும். சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினார்கள். அதற்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று காத்திருக்கிறோம். அதற்கு விலக்கு கிடைக்கும் வரை, மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்குவது அரசின் கடமை. 2,381 எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு தற்காலிகமாக நியமிக்கப்படும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் பிழைப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த ஊதியம் போதுமா? போதாதா? என்பது பற்றி வரும் திங்கட்கிழமை (நாளை) நிதித்துறை அமைச்சருடன், பள்ளிக்கல்வித்துறை ஆலோசிக்கும் கூட்டத்தில் விவாதிப்போம். அதில் என்ன தீர்வு காண முடியும்? என்று பார்ப்போம்.
பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பல்வேறு துறைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க சிற்பி திட்டம் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ஒரு மாணவருக்கு (குட்டி போலீஸ்) இதுதொடர்பாக பயிற்சி அளித்து வருகிறோம். போதைப்பொருட்கள் இல்லாத வளாகமாக பள்ளிகள் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள் |
TNPSC TRB LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||