என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஒருகாலத்தில் மிகுந்த ‘கிராக்கி’ இருந்தநிலையில், தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி பெறவேண்டும்.
கடந்த 2018-ம் ஆண்டு இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு, என்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளை கருத்தில்கொண்டு 2022-ம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை விதிக்க பரிந்துரை செய்தது. அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2022-ம் ஆண்டு வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் தற்போதும் அதே சூழ்நிலை நீடிப்பதால், மேலும் 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2024-ம் ஆண்டுவரையில் புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நீட்டித்து உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், என்ஜினீயரிங் படிப்புகளில் செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் போன்ற கணினி அறிவியலின் வளர்ந்துவரும் பாடப்பகுதிகளில் கூடுதல் பிரிவுகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள் |
TNPSC TRB LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||