தமிழகத்தில் 2.45 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச்செயலகத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. தமிழகத்திலும் இ்ப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆதார் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த இணைப்புக்காக 6-பி என்ற விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக செல்லும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், ஆதார் விவரங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று ‘கருடா’ செயலி மூலம் வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.
என்.வி.எஸ்.பி. இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் பொதுமக்கள் தாங்களே இந்த இணைப்பை ஏற்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போதுவரை 40 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் விவரங்களை இணைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||