தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1,545 அரசு பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022-23-ம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்த திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட இல்லம் தேடி கல்வி சிறப்பு அலுவலர் இளம்பகவத்தை, முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்க சமூக நல இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தார்.
அதனை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதனை ஏற்று, இளம்பகவத்தை, முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணையிடுகிறது.
மேற்கண்ட தகவல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||