தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளிலும் கற்றுத்தரப்படும் 5 ஆண்டு பி.ஏ., எல்.எல்.பி. சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி ஆகியவற்றில் அமைந்திருக்கும் அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் திண்டிவனத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் உள்ள இடங்களில் சேருவதற்கு விண்ணப்பங்கள் முதல் தொடங்கியிருக்கின்றன.
அந்தவகையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக பெருங்குடி வளாக சீர்மிகு சட்டப்பள்ளியில் 624 இடங்களுக்கும், இதர கல்லூரிகளில் உள்ள 1,731 இடங்களுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 355 இடங்களுக்கு இந்த ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வு மூலம் அவை நிரப்பப்பட இருக்கின்றன.
விண்ணப்பதாரர்கள் தகுதித்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், இனவாரியான இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு இடஒதுக்கீடுகளின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. க
ொரோனா காரணமாக கடந்த 2020-21-ம் ஆண்டில் இருந்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்படுகிறது.
அதேபோல், நடப்பாண்டிலும் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாகவே விண்ணப்பங்கள் பெற்று, கலந்தாய்வும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||