வருமானவரித்துறையில் கடந்த 2021-2022-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த ஏப்ரலில் துவங்கியது. ஆண்டுக்கு, ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது அவசியம். அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தன. இதனால், வரி செலுத்துவதற்கு வசதியாக சேவை மையங்கள் நேற்று செயல்பட்டன.
இதன் பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.
ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம், ஜனவரிமுதல் மார்ச் வரை, ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மார்ச்க்கு பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
தற்போது, வருமானவரி கணக்கு தாக்கல் முழுவதும், ஆன்லைன் வழியாகவே செய்யப்படுகிறது. ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருவாய் ஈட்டும் மூத்த குடிமக்கள் மட்டும், படிவம் வாயிலாக தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இவர்களுக்காகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சந்தேகங்களை நீக்குவதற்காகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 37 வருமான வரி சேவை மையங்கள் நேற்று செயல்பட்டன.
மேற்கண்ட தகவல்களை வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள் |
TNPSC TRB LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||