2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற இளநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக 19-ந்தேதி (இன்று) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவித்ததில் இருந்து 5 நாட்கள் வரை நீட்டிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு என்ஜினியரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் இதற்கான விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது.
நேற்று மாலை வரையிலான நிலவரப்படி 1 லட்சத்து 84 ஆயிரத்து 371 பேர் விண்ணப்ப பதிவு செய்து இருக்கின்றனர். இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 400 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர் என்றும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 183 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருக்கின்றனர் என்றும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தெரிவித்துள்ளது.
இதேபோல் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நேற்று வரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 969 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 198 பேர் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து இருப்பதாகவும், 2 லட்சத்து 86 ஆயிரத்து 564 பேர் கட்டணத்தை செலுத்தி உள்ளதாகவும் உயர்கல்வி துறை தெரிவித்து இருக்கிறது.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள் |
TNPSC TRB LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||