கள்ளக்குறிச்சியில் பள்ளி சூறையாடப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, நேற்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தில் உள்ள சக்தி சர்வதேச பள்ளியில் 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். அந்த பள்ளியின் 3-வது மாடியில் இருந்து மாணவி ஸ்ரீமதி விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. குற்றவாளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. மாணவியின் உடற்கூறு ஆய்வு நடந்துள்ளது. அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையில், இன்று (நேற்று) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமூக விரோதிகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி பள்ளிக்குள் புகுந்து பள்ளி வாகனங்களை தீக்கிரையாக்கி இருக்கிறார்கள். ஏறக்குறைய பள்ளிக்கு ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருந்தால் தனியார் பள்ளிகளை எப்படி நடத்த முடியும்?. தமிழ்நாட்டில் 20 ஆயிரம் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு யார் பாதுகாப்பு தருவார்கள்? அரசே எங்களை கைவிட்டுவிட்டால் யாரிடம் மன்றாடுவது?.
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு யார் பாதுகாப்பு?. ஆகவே நாளை (இன்று) முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது. பள்ளிகள் நடக்காது. ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு வழங்குவார்கள். தமிழக அரசு இதில் சுமுக முடிவு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள் |
TNPSC TRB LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||