12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்த நிலையில், தேர்வு முடிவு கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவு வெளியானதைத் தொடர்ந்து, தேர்வு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவ-மாணவிகள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதில் தவறுகள் இருந்தால், விடைத்தாள் மறுமதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்தது.
அதன்படி, மாணவ-மாணவிகள் பலர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி, மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது, விடைத்தாளை திருத்தி கணக்கிடும் போது ஆசிரியர்கள் சிலர் தவறாக கணக்கிட்டு மதிப்பெண்ணை வழங்கியிருப்பதாக, அந்த குற்றச்சாட்டில் தெரிவிக்கின்றனர்.
அதில், வேதியியல் பாடத்தில் ஒரு மாணவருக்கு 57 மதிப்பெண் (செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணை தவிர்த்து) வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மதிப்பெண் கூட்டலில் 67 மதிப்பெண் வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மாணவருக்கு 10 மதிப்பெண் குறைவாக கணக்கிட்டு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவருக்கும், கணினி அறிவியலில் ஒரு மாணவருக்கும் 10 மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக ஆசிரியர் திருத்தியபிறகு, முதல்நிலை, 2-ம் நிலை, முதன்மை மதிப்பீட்டாளர்கள் என்று பணியமர்த்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இவ்வளவு பேரையும் கடந்து இந்த தவறு நடந்திருப்பது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள் |
TNPSC TRB LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||