12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகல் நாளை (வியாழக்கிழமை) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேற்சொன்ன இணையதள முகவரியில் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 12 மணி முதல் 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி வரை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதற்கான கட்டணத்தை அதே அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||