கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் சற்று தாமதமாகவே தொடங்கின. இதனை கருத்தில்கொண்டு பாடத்திட்டங்களும் சற்று குறைக்கப்பட்டன. அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் 50 சதவீதமும், 10-ம் வகுப்புக்கு 39 சதவீதமும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
அதன்படியே, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வும், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இறுதி தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் தேர்ச்சி முடிவு வெளியிடப்பட்டு, 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன.
இதனைத்தொடர்ந்து 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன. இதில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களை தவிர, 10, 11-ம் வகுப்பு பொது தேர்வை எழுதியவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த நிலையில், கடந்த கல்வியாண்டில் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என்றும், நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் முழு பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||