1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான (2021-22) நேரடி வகுப்புகள் தற்போது நடந்து வருகின்றன. வழக்கமாக மார்ச் மாதத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கும். அதனைத்தொடர்ந்து பிற வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும்.
நடப்பு ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் சற்று தள்ளிப்போய் இருக்கிறது. அதன்படி, 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ந்தேதி ஆரம்பித்து 31-ந்தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.
இதுதவிர 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13-ந்தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) வகுப்புகள் ஜூன் மாதம் 13-ந்தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||