புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
‘‘1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு நடைபெறும். பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
நீட் தேர்வு ஜூலை மாதம் 17-ந் தேதி நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்போராட்டம் மூலம் விலக்கு பெற முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் வெற்றிகரமாக முடிந்தது’’.
இவ்வாறு அவர் கூறினார்.
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கிடையாது என நேற்று முன்தினம் தகவல் பரவிய நிலையில், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு நடைபெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||