இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. போன்ற இடஒதுக்கீட்டு பிரிவினர் 30 வயது வரையும், பொதுப்பிரிவினர் 25 வயது வரையும் எழுதலாம் என்று கடந்த 2017-ம் ஆண்டு சி.பி.எஸ்.சி. உச்சவரம்பு நிர்ணயித்து இருந்தது. இந்தநிலையில், இந்த வயது உச்சவரம்பை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு எழுத வயது உச்சவரம்பு இருக்கக்கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அதன் செயலாளர் டாக்டர் புல்கேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விதிமுறைகளை திருத்தி, அறிவிப்பாணை வெளியிடுவதற்கான நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு முகமைக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
வயது உச்சவரம்பு நீக்கப்பட்டதால், ‘நீட்’ தேர்வை எந்த வயதினரும், எத்தனை தடவை வேண்டுமானாலும் எழுதலாம் என்றும், இதர படிப்புகளில் சேர்ந்த பிறகும் எழுதலாம் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கும் இது உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||