மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.இதனால், அவர்கள் பெறும் அகவிலைப்படி 34 சதவீதமாக உயருகிறது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது. 7-வது சம்பள கமிஷன் தெரிவித்த சிபாரிசுகள் அடிப்படையிலான வழிமுறைப்படி அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.9 ஆயிரத்து 544 கோடியே 50 லட்சம் செலவாகும். இதனால், 47 லட்சத்து 68 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சத்து 62 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||