தமிழக அரசு வேலைக்கு கட்டாயம் தமிழில் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் புதிதாக சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு ஆள் எடுக்க உள்ளனர். அதற்காக நடத்தப்பட உள்ள தேர்வுக்கான புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி விண்ணப்பதாரர்கள் முதலில் தமிழில் தகுதி தேர்வு எழுதி 40 சதவீதம் மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும். அதன் பிறகுதான் அடுத்தகட்ட எழுத்து தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என்றும் சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||