கொரோனா தொற்று இருந்த காரணத்தினால் என்ஜினீயரிங் உள்பட அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில படிப்புகளுக்கு செமஸ்டர் தேர்வு நிறைவு பெற்ற நிலையில், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு தொடர்ந்து தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு முடிந்து, தன்னாட்சி அதிகாரம் பெறாத இணைப்பு கல்லூரிகளில் அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.அதன்படி பி.இ., பி.டெக் (முழு நேரம்) 4, 6, 8-வது செமஸ்டர் மாணவர்கள், பி.இ., பி.டெக். (பகுதி நேரம்) 4, 6 செமஸ்டர் மாணவர்கள், பி.ஆர்க். (முழு நேரம்) 4, 6, 8, 10 ஆகிய செமஸ்டர் மாணவர்களுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்குகிறது.
இவர்களுக்கான கடைசி வகுப்பு நாட்கள் ஜூன் மாதம் 11-ந் தேதி ஆகும். அதனைத்தொடர்ந்து செய்முறைத்தேர்வு ஜூன் 13-ந் தேதியும், செமஸ்டர் தேர்வு 22-ந் தேதியும் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வகுப்புகள் வாரத்துக்கு 6 நாட்கள் (சனிக்கிழமை உள்பட) நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||