கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இருந்தாலும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு தொடங்கி நடைபெறுகிறது.
அந்த வரிசையில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 25-ந்தேதி வரை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு ஏற்றவாறு தேர்வு அட்டவணை ஒதுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.
அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை ஒதுக்கப்பட்டு இருப்பது மாணவர்கள், பெற்றோரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கி இருக்கிறது. பொதுவாக தேர்வு நடைபெறும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை வந்தால் விடுமுறை விடப்படும். ஆனால் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, தேர்வுக்கு இடைப்பட்ட நாட்களில் வரும் 6, 13, 20-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) சில பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘காலதாமதம் ஏற்பட்டதாலும், தேர்வை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதில் பெரும்பாலும் அரியர் மாணவர்களுக்கான பாடப்பிரிவுகளுக்குதான் ஞாயிற்றுக்கிழமைகளில் அட்டவணை ஒதுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||