தமிழக அரசு சார்பில் சென்னையில் இயங்கும் அகில இந்திய குடிமைப்பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வு பயிற்சி மையத்தின் பயிற்சித்துறை தலைவரும், தலைமை செயலாளருமான இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள குடிமைப்பணி முதல்நிலை தேர்வுக்கு தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத்தேர்வு கடந்த 23-ந் தேதி அன்று நடைபெற இருந்ததது. கொரோனா ஊரடங்கால் இந்த தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது 1-ந் தேதி (இன்று) முதல் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே ஒத்திவைக்கப்பட்ட நுழைவுத்தேர்வு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும். நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வருகிற 21-ந் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இப்பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும் என்பதால் ஆர்வலர்களின் கோரிக்கையின் பேரில் 2 மணி நேரம் தேர்வு தற்போது 2½ மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||