சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத்தேர்வு வருகிற ஏப்ரல் 26-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பருவத்தேர்வு இந்த கல்வியாண்டில் நடத்தப்படும் என்று ஏற்கனவே சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்து இருந்தது. அதன்படி முதல் பருவத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 17-ந்தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தொடங்கி நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யாம் பர்த்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தொடங்கும். தேர்வுக்குரிய மாதிரி வினாத்தாள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும். அதேபோல்தான் வினாத்தாள் அமையும்.
இதற்கு முன்பு நடந்த தேர்வுகளின்போது ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கான முழு தேர்வு அட்டவணை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||