எந்த காரணமும் சொல்லாமல், தேர்தல் பணிகளுக்கு செல்ல வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய, ஆசிரியர்களின் பட்டியலை, பள்ளி கல்வி அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.
இந்த பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, மூன்று கட்டமாக தேர்தல் பணி பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆனால், பயிற்சி காலத்தில் சில ஆசிரியர்கள் விடுப்பு கேட்டுள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர்கள் பிறப்பித்துள்ள உத்தரவு:தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல், தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுவது தொடர்பாக, எந்தவித காரணங்களும் கூறாமல், பள்ளிக் கல்வித் துறை அறிவிக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
மாறாக, தவறான காரணம் கூறி, தேர்தல் பணிகளை புறக்கணித்ததாக புகார் எழுந்தால், அந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||