நாஞ்சில் சம்பத், சுகிசிவம், பாரதிபாஸ்கருக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருது வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் சி.பா.ஆதித்தனார் மாத இதழ் விருது, உயிர்மை மாத இதழுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது-நாஞ்சில் சம்பத்துக்கும், மகாகவி பாரதியார் விருது- பாரதி கிருஷ்ணகுமாருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது-செந்தலை கவுதமனுக்கும், சொல்லின் செல்வர் விருது- சூர்யா சேவியருக்கும், சிங்காரவேலர் விருது- மதுக்கூர் ராமலிங்கத்துக்கும், தமிழ்த்தாய் விருது - மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கும் வழங்கப்பட உள்ளது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது- இரா.சஞ்சீவிராயருக்கும், சி.பா.ஆதித்தனார் மாத இதழ் விருது- உயிர்மை மாத இதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது- கு.அரசேந்திரனுக்கும், உமறுப்புலவர் விருது- நா.மம்மதுக்கும், கி.ஆ.பெ.விருது- ம.ராசேந்திரனுக்கும், கம்பர் விருது- பாரதி பாஸ்கருக்கும், ஜி.யு.போப் விருது- ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கும், மறைமலையடிகள் விருது- சுகி.சிவத்துக்கும், இளங்கோவடிகள் விருது- நெல்லை கண்ணனுக்கும், அயோத்திதாச பண்டிதர் விருது- ஞான.அலாய்சியசுக்கும் வழங்க ஆணையிடப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருது தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியும், ஒரு பவுன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||