மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஆன்லைனில் நடக்க உள்ளது. அதன்படி ஏற்கனவே கலந்தாய்வு குறித்த அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு முடிவு இன்னும் வெளியாகாததால், ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையில் சில மாற்றங்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செய்து இருக்கிறது. அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது.
நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) வரை பதிவு, கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்து உறுதி செய்ய வேண்டும். பின்னர் 8, 9, 10 ஆகிய தேதிகளில் அவரவர் தேர்வு செய்திருந்த மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்ல வேண்டும்.
இந்த கலந்தாய்வுக்கான இறுதி முடிவு வருகிற 15-ந் தேதி வெளியிடப்பட்டு, 16-ந் தேதி தேர்வு செய்த இடங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுத்தப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற கல்லூரிகளில் அந்தந்த மாணவர்கள் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி மாலை 3 மணிக்குள் சேர வேண்டும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்து இருக்கிறது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||