திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கிப்பணி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு கழக தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி அதிகாரி, கிளார்க் தேர்வு, செபி அமைப்பின் அதிகாரி தேர்வு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு கழக தேர்வுகளுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
இதில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் ஐ.பி.பி.எஸ். தேர்வையும், 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் பாரத ஸ்டேட் வங்கி தேர்வையும் எழுதலாம்.
தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு கழகத்தின் முதுநிலை கிளார்க் ஸ்டெனோ மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கான 4,315 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும். இதற்குரிய கல்வி தகுதி 10-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகும்.
இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற உதவும் வகையில் வழிகாட்டு பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 12-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 23-ந் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். பயிற்சியின்போது 20 மாதிரி தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.
இதில் சேருபவர்களுக்கு வங்கி தேர்வுகளில் இடம் பெறும் காமன் சென்ஸ் ரிசனிங், பஸில், நியூமெரிக்கல் எபிலிட்டி, குவாண்டிடேட்டிவ் ஆப்ட்டியூடு, இங்கிலீஸ் லாங்குவேஜ், ஸ்ட்டாடிக் ஜி.கே. மற்றும் டேட்டா இன்டர்பிரட்டேசன் ஆகிய தலைப்புகளில் 7 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்கள் சிவந்தி அகாடமியின் சார்பில் பயிற்சி பெறுபவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் ஆன்லைனில் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் சேர கட்டணம் ரூ.5,500 ஆகும். பயிற்சியில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 10-ந் தேதி ஆகும்.
மேலும், பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளை தாளில் தங்களது புகைப்படம் ஒட்டி, தங்களது பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களை குறிப்பிட்டு எழுதி, அத்துடன் ரூ.5,500-க்கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி அல்லது ஐ.ஓ.பி.-ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பயிற்சி கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-242998 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||