Home »
EDU UPDATES
» போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற தினமும் செய்தித்தாள்கள் படிப்பது அவசியம் - ஐ.எஃப்.எஸ். தேர்வில் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்த திவ்யா தகவல்
போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற தினமும் செய்தித்தாள்கள் படிப்பது அவசியம் - ஐ.எஃப்.எஸ். தேர்வில் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்த திவ்யா தகவல்
- இந்திய வனப்பணி (ஐ.எப்.எஸ்.) தேர்வில் பழனியை சேர்ந்த இளம்பெண், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நடராஜன்.
- இவர் கீரனூர் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்திராமணி. இவர் பழனியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவர்களது மூத்த மகள் திவ்யா (வயது 24).
- இவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுக்கு தயாராகி வந்தார். மேலும் சமீபத்தில் நடந்த வனப்பணிக்கான ஐ.எப்.எஸ். தேர்வை அவர் எழுதியிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.
- இதில், திவ்யா தேசிய அளவில் 10-வது இடம் பிடித்தார்.
- மேலும் தமிழக அளவில் முதலிடம் பிடித்ததுடன், முதல் முயற்சியிலேயே அவர் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து திவ்யாவிடம் கேட்டபோது கூறியதாவது:- பழனி மற்றும் தாராபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்தேன்.
- பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தேன். 2019-ல் கல்லூரி படிப்பை முடித்ததும் அரசின் உயரிய பணிக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்கான முயற்சியில் இறங்கினேன்.
- தொடக்கத்தில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்தது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தங்கி படித்தேன். பின்னர் ஐ.எப்.எஸ். பணியின் முக்கியத்துவத்தை தெரிந்துகொண்டேன்.
- மேலும் சிறு வயதில் இருந்தே விலங்கு, செடி, கொடிகள் என்றால் கொள்ளை ஆர்வம். இதனால் ஐ.எப்.எஸ். பணிக்கு தயாராக தொடங்கினேன். இதில் முதல்நிலை தேர்வு கடினமாக இருந்தது. முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு எளிதாக இருந்தது.
- இருப்பினும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. தற்போதுகூட இது கனவா? அல்லது நனவா? என எண்ணி பார்க்கிறேன். செய்தித்தாள் வாசிக்க வேண்டும் ஒரு நாளைக்கு 6-ல் இருந்து 8 மணி நேரம் ஒதுக்கி படிப்பேன்.
- தினமும் என்ன படிக்க வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்து, அதை அன்றைய தினமே படித்து முடிப்பேன். பெரும்பாலும் தேர்வுக்கு தயாராக தொடங்கியதில் இருந்தே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமும் பல்வேறு புத்தகங்கள் படித்தேன்.
- பொதுவாகவே கிராமப்புறங்களில் இருந்து அரசு பணிக்கு தயாராகும் மாணவர்கள் தினமும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். அதோடு ஆன்லைன் மூலம் கிடைக்கும் பல்வேறு தகவல்களையும் திரட்டி, அதை தயார்படுத்த வேண்டும்.
- எந்நேரமும் படிக்காமல் அதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, படிக்க வேண்டியது என்னென்ன என்பதை தீர்மானித்து படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||