எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த கல்வியாண்டில் 436 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தன. அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு கூடுதலாக 544 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கின்றன.
தகுதியுடைய அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில் 544 இடங்களில் 541 இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் போட்டி போட்டு தேர்வு செய்தனர். அதில் மீதம் 3 இடங்கள் இருந்தன. அந்த இடங்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்பட்டு இருந்தது. அதற்காக மாணவர்கள் கலந்தாய்வு நடைபெறும் ஓமந்தூரார் பன்னோக்கு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடினர்.
ஆனால் அந்த 3 இடங்களுக்கு நேற்று கலந்தாய்வு நடக்கவில்லை என்று கூறியதால், மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் மனவேதனை அடைந்தனர். சிலர் ஆதங்கத்துடன், இதை முதலிலேயே சொல்லியிருந்தால் நாங்கள் வந்திருக்கமாட்டோமே என தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ‘இந்த 3 இடங்களுக்கும், தேர்வு செய்த 541 இடங்களில் மாணவர்களுக்கு குறிக்கப்பட்ட தேதியில் சேராமல் திரும்ப பெறப்படும் இடங்களையும் சேர்த்து மொத்தமாக 2-ம் கட்ட கலந்தாய்வில் நடத்தப்படும். அந்த கலந்தாய்வு 2 அல்லது 3 வாரங்கள் கழித்து நடத்தப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||