பள்ளிக்கல்வித் துறையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நன்னடத்தை சான்றிதழ், ஆளறிசான்றிதழ், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களும் அவர்தம் இல்லத்துக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றி பெற்றுக்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மானியக்கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நன்னடத்தை சான்றிதழ், ஆளறிச்சான்றிதழ், உண்மைத்தன்மை சான்றிதழ், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் உள்பட 23 வகையான சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றி பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் வருங்காலங்களில் புதியதாக கண்டறியப்படும் சேவைகளையும் மின் மாவட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் இணையவழி சேவையாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கும் இந்த திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்து ஆணையிடுகிறது. மேற்கண்ட தகவல் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||