கொரோனா காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் மீண்டும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 1- 12 என அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. மேலும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட தடை தொடர்கிறது. அரசின் இந்த அறிவிப்பால் மாணவர்களைவிட, எப்போது பள்ளிகள் திறக்கும்? தங்கள் பிள்ளைகளுக்கு எப்போது முழுமையான கல்வி கிடைக்கும்? என்று எதிர்பார்த்து கொண்டிருநத பள்ளி மாணவர்களின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
'தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 -12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் கொரோனா குறித்த அச்சம் இன்னும் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. அவர்களுக்கு பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம். நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்' என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அனைத்து வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறிவிட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவதா, ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பதா என்பதை அந்த பள்ளி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அதன் பின்விளைவுகளை எப்படி எதிர்கொள்வது என்று பள்ளி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
அத்துடன் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளதால், இன்னும் சில மாதங்களில் நடத்தப்பட வேண்டிய ஆண்டு இறுதித் தேர்வை கருத்தில் கொண்டு பள்ளி நேரடி வகுப்புகளுக்கு மாணவர்களை வர சொல்லி கட்டாயப்படுத்த முடியாத நிலைக்கு பள்ளி நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளன. எனவே பள்ளி திறப்பு குறித்து அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||