Home »
@ FLASH NEWS
,
EDU UPDATES
» PLUS TWO EXAM - பிளஸ் 2 தேர்வு ரத்தாகிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
- பிளஸ் 2 தேர்வு எப்போது? பிளஸ் 2 தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்த ஆய்வுக் கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதி காரிகளிடம் விவரங்கள் கேட்றிந்தார்.
- அப்போது கொரோனா தொற்றின் தீவிரம் குறித்தும், மாணவர்களின் பாது காப்பு குறித்தும், பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்த விவரங்களை முதல்வர் கேட்டறிந்தார்.
- பின்னர் இந்த கூட்டத் திற்கு பிறகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
- தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப் பட்டுள்ள பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
- பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இந்த தேர்வு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், பெற்றோரின் கருத்தும் தெரிவிக்கப்பட் டது.
- இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு நேற்று மாலை 7 மணி அளவில் சிபிஎஸ் இ 12ம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
- அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||