- முதல் பரிந்துரை , பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரியினை , ஐம்பது விழுக்காட்டிற்கு கணக்கிட வேண்டும்.
- இரண்டாவது பரிந்துரை , பதினோராம்வகுப்பு பொதுத்தேர்வின், ஒவ்வொரு பாடங்களின் கருத்தியல் தேர்வு மதிப்பெண்களை , இருபது விழுக்காட்டிற்கு கணக்கிட வேண்டும்.
- மூன்றாவது பரிந்துரை , பன்னிரெண்டாம்வகுப்பு செய்முறை தேர்வுகளின் மதிப்பெண்களையும், அகமதிப்பீடு மதிப்பெண்களையும், முப்பது விழுக்காட்டிற்கு கணக்கிட வேண்டும்.
- பன்னிரெண்டாம்வகுப்பில் ஒவ்வொரு பாடத்தின் செய்முறைத் தேர்வுக்கான இருபது மதிப்பெண்களையும், மற்றும் அக மதிப்பீட்டிற்க்கான பத்து மதிப்பெண்களையும் , மொத்தம் முப்பது மதிப்பெண்களையும் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டிற்க்கான பத்துமதிப்பெண்களை , முப்பதுமதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக , பன்னிரெண்டாம்வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு , அவர்களின் பதினோராம்வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பதினோராம்வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம்வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு , அவர்களின் பத்தாம்வகுப்பு மற்றும் பதினோராம்வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில், பன்னிரெண்டாம்வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
- கடந்த ஆண்டு.. பதினோராம்வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் சில பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ , தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ , அப்படிப்பட்ட மாணவர்களுக்கு , தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு , முப்பத்தைந்து விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.
- பதினோராம்வகுப்பு எழுத்துத் தேர்வு , அக மதிப்பீடு , செய்முறைத் தேர்வு மற்றும் பன்னிரெண்டாம்வகுப்பு அக மதிப்பீடு , செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் , ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் , தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
- ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு , உச்சநீதிமன்ற ஆணைப்படி , ஜூலை முப்பத்திஒன்றாம் தேதிக்குள் அரசுத்தேர்வுகள்துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.
- இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் , தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு , அவர்கள் விரும்பினால் பன்னிரெண்டாம்வகுப்பு எழுத்துத்தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் , அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே , அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.
- தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு , கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
- பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை , ஒரு நொடியில் கணக்கிட்டுக்கொள்ளலாம் , அதற்கான எக்ஸெல் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது , அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- CLICK HERE FOR DETAILS | DOWNLOAD
மேலும் சில பரிந்துரைகள்,
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள் |
LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||