நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மருத்துவமனைகளுக்கு மனிதநேயத்தோடு தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை. சூழ்நிலை மாறும்போது எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பதை கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து ஆன்-லைன் வகுப்புகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளதா? என நிருபர்கள் கேட்டதற்கு, பொறுத்து இருந்து பாருங்கள், இன்னும் ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று அறிவிப்பேன் என்றார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||