அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஆன்-லைன்’ மூலம் நீட் தேர்வு பயிற்சி அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதி தொடங்கும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற நோக்கில், பள்ளிக்கல்வி துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான பயிற்சி கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் பயிற்சி வகுப்புகள் ஆன்-லைன் மூலம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கற்றல் மற்றும் மதிப்பீட்டு தளமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ‘இ-பாக்ஸ்’ நிறுவனம் நீட் தேர்வுக்கு ஆன்-லைனில் இலவச பயிற்சியை ஜூன் 15-ந்தேதி முதல் வழங்க இருக்கிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றை உள்ளடக்கிய 6,500 கேள்விகள் இதில் இடம் பெற உள்ளது.
ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் வீடியோ மூலம் வகுப்புகளும், 4 மணி நேரம் செய்முறை தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. நீட் தேர்வுக்காக விண்ணப்பித்து இருக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் இந்த பயிற்சிக்காக http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||